

மகா மிருத்யுஞ்சய மந்திரம்
ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டி வர்தனம் |
உர்வாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ||
பொருள் :
இயற்கையாகவே நறுமணத்தை கொண்டவரும், அடியவர்களுக்கு கருணையை அருள்பவருமான முக்கண் கொண்ட எங்கள் பெருமானே உங்களை பூஜித்து வழிபடுகிறோம். பழங்கள் எப்படி மரத்தில் இருந்து விடுபடுகின்றனவோ அதே போல் மரணத்தின் பிடியில் இருந்து என்னை விடுவித்து, ஆன்மீக வழியில் இருந்து மனம் தடுமாறாமல் நான் வாழ அருள் செய்ய வேண்டுகிறேன்.
காயத்ரி மந்திரம்
"ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"
பொருள் :
பூர், புவ, ஸுவ எனும் மூன்று லோகங்களையும் படைத்த ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரிய சக்தியை தியானிக்கிறோம். மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை மேம்படுத்தட்டும்.
காயந்தம் த்ராயதே இதி காயத்ரி!
தன்னை ஜபிப்பவனைக் காப்பதே காயத்ரி மந்திரம் ஆகும்.
விசுவாமித்திரரால் அருளப்பட்ட இந்த காயத்ரி மந்திரம் மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. `காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று.