Showing posts with label நல்ல பழக்க வழக்கங்கள். Show all posts
Showing posts with label நல்ல பழக்க வழக்கங்கள். Show all posts

Friday, June 26, 2026

புத்தக வாசிப்பின் மகிமை – Greatness of Reading Books




புத்தகங்களின் முக்கியத்துவத்தின் சில சிறப்புகள்:
  • அறிவு வளர்ச்சி: புதிய தகவல்களையும், உலகளாவிய விஷயங்களையும் அறிய உதவுகிறது.
  • மன அமைதி: கவலைகளை மறந்து மன அழுத்தத்தைக் குறைத்து, அமைதியைத் தருகிறது.
  • படைப்பாற்றல்: சிந்திக்கும் திறனை அதிகரித்து, புதியன படைக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
  • சொல்வளம்: வாசிப்பு நமது மொழித் திறனையும், எழுதும் ஆற்றலையும் பெருக்கும்.


புத்தகம் வாசிப்பவன் இறப்பதற்கு முன் ஆயிரம் வாழ்க்கையை வாழ்கிறான். ஆனால், வாசிக்காதவன் ஒரே வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறான். – George R.R.Martin

எவ்வளவு வாசிக்கிறாயோ, அவ்வளவு தெரிந்துக்கொள்வாய். எவ்வளவு கற்றுக்கொள்கிறாயோ, அவ்வளவு பயணம் செய்வாய். – Dr. Seuss

புத்தகமில்லாத அறை என்பது, உயிரில்லாத உடலுக்கு சமம். – Marcus Tullicus Cicero

புத்தகங்களே மிகவும் அமைதியான மற்றும் நிலையான நண்பர்களாவார்கள். அதேபோல் அவை புத்திசாலியான ஆலோசகர்கள் மற்றும் பொருமையான ஆசிரியர்களும் கூட. – Charles W. Eliot

பிரதிபலிக்காமல் படிப்பது என்பது, சாப்பிட்டுவிட்டு ஜீரணமாகாததற்கு சமம். – Edmund Burke

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதேபோல் மூளைக்கு படிப்பது. – Joseph Addison

புத்தகங்கள் - நீங்கள் கைகளில் ஏந்தியிருக்கும் கனவுகள். – Neil Gaiman

புத்தகங்கள் மிகவும் ஆபத்தானவை. சிறந்த ஒருவருக்கு மட்டுமே அந்த புத்தகத்தின் அட்டையில் “ இது உங்களின் வாழ்க்கையையே மாற்றும்” என்று எழுதியிருக்கும். – Helen Exley

ஒரு புத்தக்கத்தை படிப்பது என்பது ஒரே ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவது போல். – Diane Duane

ஆணோ? பெண்ணோ? யாராக இருந்தாலும், புத்தகத்தை விரும்பாதவர்கள், முட்டாள்களே. – Jane Austen

ஒரு நல்ல புத்தகம் கிடைப்பது, எனது வாழ்வின் ஒரு சிறப்பான நிகழ்வு.- Stendhal

புத்தகம் என்பது நம் ஆன்மாவின் கண்ணாடி. – Virginia Woolf

வாசிப்பது என்பது உட்கார்ந்த இடத்திலேயே பல இடங்களுக்குப் போக வைக்கும் ஒரு மாயாஜாலம். – Mason Cooley

புத்தகத்தை எரிப்பது ஒரு கொடூரம் என்றால், அதனைப் படிக்காதது அதைவிட மிகப்பெரிய கொடூரமாகும். – Joseph Brodsky

புத்தகத்தைப் போல ஒரு விசுவாசமான நண்பன் இல்லை. – Ernest Hemingway

ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது,

*ஒரு நூலகம் கட்டுவேன்* என்று பதிலளித்தாராம் மகாத்மா...


தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் *ஜவஹர்லால் நேரு*...

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் *பெட்ரண்ட் ரஸல்*...

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் *ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்*...

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் *நெல்சன் மண்டேலா*...

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி *லெனின்* கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்...

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் *சார்லிசாப்லின்*...

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் *வின்ஸ்டன் சர்ச்சில்*...

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் *மார்டின் லூதர்கிங்*...

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் *பகத்சிங்*...

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.  *ஆபிரகாம் லிங்கன்*...

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி– *ஜூலியஸ் சீசர்*...

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..  – *டெஸ்கார்டஸ்*...

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…  – *இங்கர்சால்*...

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– *பிரான்சிஸ் பேக்கன்*...

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!  – *லெனின்*...

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!  – *ஆஸ்கார் வைல்ட்*...

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!  – *சிக்மண்ட் ஃப்ராய்ட்*...

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…  – *மாசேதுங்*...

வாசிக்கும் பழக்கம் ஓர் மனிதனை முழு மனிதனாக மாற்றிவிடும்...

உலகில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்கள் பலரும் நூல்கள் வழியாகத் தான் வாழ்வின் வெளிச்சத்தை நோக்கி பயணித்தனர்...


https://svdayceylon.blogspot.com/2023/10/swami-vivekananda-day-programmes.html
https://rkmceylon.blogspot.com/2022/01/ramakrishna-mission-ceylon-branch.html




Tuesday, September 2, 2025

Veda Padam - Prayer - Tamil

 



மகா மிருத்யுஞ்சய மந்திரம்

ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டி வர்தனம் |
உர்வாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ||

பொருள் :

இயற்கையாகவே நறுமணத்தை கொண்டவரும், அடியவர்களுக்கு கருணையை அருள்பவருமான முக்கண் கொண்ட எங்கள் பெருமானே உங்களை பூஜித்து வழிபடுகிறோம். பழங்கள் எப்படி மரத்தில் இருந்து விடுபடுகின்றனவோ அதே போல் மரணத்தின் பிடியில் இருந்து என்னை விடுவித்து, ஆன்மீக வழியில் இருந்து மனம் தடுமாறாமல் நான் வாழ அருள் செய்ய வேண்டுகிறேன்.



காயத்ரி மந்திரம்

"ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"


பொருள் :
பூர், புவ, ஸுவ எனும் மூன்று லோகங்களையும் படைத்த ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரிய சக்தியை தியானிக்கிறோம். மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை மேம்படுத்தட்டும்.

காயந்தம் த்ராயதே இதி காயத்ரி!
தன்னை ஜபிப்பவனைக் காப்பதே காயத்ரி மந்திரம் ஆகும்.


விசுவாமித்திரரால் அருளப்பட்ட இந்த காயத்ரி மந்திரம் மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. `காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று.



Monday, July 21, 2025

Life Plan - Planning Your Days, Months, and Years

The Ultimate Life Plan empowers you to prioritize what truly matters, ensuring you make consistent progress towards your aspirations.

Key features include:
  • Goal setting and tracking
  • Daily, weekly, and monthly planning
  • Habit formation tools
  • Task management system
  • Reflection 
  • And more
Whether you're a busy professional, a student, or anyone seeking to bring more structure and purpose to their days, this template adapts to your unique needs. 


வாழ்க்கையின் இலட்சியம்
நீண்ட கால இலக்கு – Long term goal

குறுகிய கால இலக்கு – Short term goal
மன ஒருமைப்பாட்டடை வளர்த்தல்


One of the greatest lessons I have learnt in my life is to pay as much attention to the means of work as to its end. He was a great man from whom I learnt it, and his own life was a practical demonstration of this great principle I have been always learning great lessons from that one principle, and it appears to me that all the secret of success is there; to pay as much attention to the means as to the end.
Swami Vivekananda
https://cdn.vivekavani.com/swami-vivekananda-quotes-successful-life-work/


என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடங்களில் ஒன்று, வேலையின் முடிவைப் போலவே, அதன் வழிமுறைகளிலும் அதிக கவனம் செலுத்துவது. அவர் ஒரு சிறந்த மனிதர், அவரிடமிருந்து நான் அதைக் கற்றுக்கொண்டேன், அவருடைய சொந்த வாழ்க்கை இந்த சிறந்த கொள்கையின் நடைமுறை நிரூபணமாகும், அந்த ஒரு கொள்கையிலிருந்து நான் எப்போதும் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன், வெற்றியின் அனைத்து ரகசியமும் அங்கே இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது; முடிவைப் போலவே வழிமுறைகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்
சுவாமி விவேகானந்தர்




































































Wednesday, July 10, 2024

Education in Tamil literature - தமிழ் இலக்கியங்களில் கல்வி

 

 

கல்வி என்ற சொல்லின் ஆதாரச் சொல் 
‘கல்லுதல்’ என்பதாகும். கல்லுதல் என்றால் தோண்டுதல்.

 கல்வி:

கல்வி என்ற சொல்லின் ஆதாரச் சொல் ‘கல்லுதல்’ என்பதாகும். கல்லுதல் என்றால் தோண்டுதல். மனதில் மறைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொணர்ந்து மடைமாற்றம் செய்து திசை திருப்பவல்லது கல்வி.

 மனிதனுக்குள் ஏற்கெனவே பரிபூரணத் தன்மை என்பது இருக்கிறது. அதை வெளிப்படுத்துவது தான் கல்வியாகும்.


எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்தெழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.              
சுவாமி விவேகானந்தர்

கல்வி கற்றவரின் சிறப்பு
:அழியாத செல்வமாகிய கல்வியைக் கற்றவர்கள் போற்றுதலுக்கு உரியவர் ஆவார்கள்.

“மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னலில் கற்றோன் சிறப்பு உடையன் - மன்னற்கு
தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை: கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு”


ஒரு நாட்டை ஆளக்கூடிய மன்னனை விட, குற்றமில்லாமல் கல்வி கற்றவன் சிறப்புடையவன். ஏனெனில், மன்னனுக்கு தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டாகும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கல்வி கற்றவர்களால் மட்டுமே வாழமுடியும் எனில் மிகையல்ல.

' கல்வியைப் பதித்து வைத்த இடத்திலிருந்து யாராலும் கவர்ந்துவிட முடியாது, தக்கவர்க்குக் கொடுப்பதனால் குறைவுபடாது. செல்வத்தைப் பறித்துக் கொள்ளும் அரசராயினும், பிறராயினும் அதனைக் கவர்ந்துக் கொள்ள முடியாது. எனவே ஒருவன் தனது மக்களுக்குப் பின்னர் தேவைப்படும் எனத் தேடிவைத்துச்; செல்ல வேண்டியது பொருட்செல்வமன்று. அதனைவிட உயர்ந்த கல்விச் செல்வமே.

'எச்சமென ஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற" (134)
என்பது நாலடியார் தரும் கருத்து.

 இக்கல்வியானது,
'வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவு றாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது
கல்வி யென்னும்
உள்ளத்தே பொருளிருக்க உலகெல்லாம் பொருள் தேடி
உழல்வதென்னே" (69)

'என்பது விவேகசிந்தாமணி பாடல்

'வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே” (183)

என்று புறநானூறும்,

'எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியில் கற்றோரை வருக என்பர்” (38)

என்று வெற்றிவேற்கையும்
கற்றவர்கள் எக்காலத்தும் மதிக்கப்பட்டார்கள் என்பதை உணர்த்துகின்றன. கற்றவர்களை அரசன் விரும்பி ஏற்பான்; கற்றவர்கள் பார்வையில் சாதியில்லை; மதமில்லை; இனமில்லை; கீழோர் மேலோர் என்ற வேறுபாடில்லை; சமமாக மதிக்கும் மாண்பே அவர்களுடையது என்பது பெறப்படுகிறது.

எத்தகைய அறிஞனாயினும், பெரியோராயினும் ஆற்றைக் கடக்க நினைப்பவர்கள் தோணியில் செல்லும் போது தோணியோட்டி எந்தச் சாதி, எந்த இனம், எந்த மதம், எந்த நாடு, எந்த மொழி என்று பார்ப்பதில்லை. அவன் துணை கொண்டே அந்த ஆற்றைக் கடக்கின்றனர். ஏனெனில் அவன் அத்தொழிலைக் கற்றவன், கற்றவர்க்கு என்றைக்கும் மதிப்புண்டு. கல்வி இளையவர் என்றோ முதியவர் என்றோ, ஆண் என்றோ பெண் என்றோ பார்ப்பதில்லை. அது எல்லோரையும் சமமாக இணைத்து எழுச்சி கொள்ள வைக்கிறது.

'கற்றோர்க்குத் தம்மூர் என்று ஊரில்லை" 
என்று நான்மணிக்கடிகையும்,

'இளமையில்கல்" என்று ஒளவையும் மொழிந்தனர்.

'மன்னர்க்குத் தன்தேச மல்லாற்; சிறப்பில்லை
 கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு" (26)
என்று மூதுரை நல்வழி காட்டுகிறது.

கல்வி கற்காதவர்களின் நிலை:

முறையாக கல்வி கற்காமல் கற்றவர்களைப் போன்று நினைத்தக் கொள்ளும் மனிதர்களும் இந்த உலகத்தில் இருக்கின்றார்கள். கல்வி கற்காதவர்களின் நிலையைப் பற்றி,
“கானம் மயில் ஆடக்கண்டு இருந்தவான் கோழி
தானும் அதுஆகப் பாவித்து –தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்றகவி”

மயில் ஆடுவதைப் பார்த்து வான்கோழி ஆடுவதைப் போன்றது கல்வி கற்காதவர்களின் நிலை. கல்வி கற்றவர்கள் ஆழமாக பொருள் விரித்துக் கூறுவர். கல்வி கற்காதவர்கள் பொருள் விரித்துக் கூறும் போது சொற்குற்றமும், பொருள் குற்றமும் இருக்கும் என்கிறார். கல்லாதவர்கள் இகழப் படுவார்கள், புகழப்படமாட்டார்கள்.

“கலைஆகிக் கொம்புஆகிக் காட்டகத்தே நிற்கும்
அவைஅல்ல நல்ல மரங்கள்! – சபைநடுவே
நீட்டுஓலை வாசியா நின்றான் குறிப்புஅறிய
மாட்டாதவன் நல்மரம்”


கல்விஅறிவும் குறிப்பறியும் குணமும் இல்லாதவர்கள் சிறந்த மரங்களாவர். மரங்களுக்கு கிளை, குறுங்கிளை இருப்பதைப் போல இவர்களுக்கும் கை, கால்கள் இருக்கின்றன. ஆறரிவுடைய மனித இனத்தில் பிறந்தும் கல்வி அறிவும், குறிப்புணரும் குணமும் இல்லாதவர்கள் காட்டிலுள்ள மரங்களுக்கே ஒப்பாவார்கள் என கல்வி கற்காதவர்களின் தோற்றத்தை எடுத்துரைக்கின்றார். கல்வியறிவு இல்லாதவர்கள் கற்றவர்களின் சொற்களை மதித்துக் கேட்க மாட்டார்கள்.


நாலடியார் - 14.கல்வி- 131 முதல் 140 வரை

கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே
நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து.

கல்விகள் முடிவில்லாதன; ஆனால் கற்பவருடைய வாழ்நாட்கள் சில! சற்றுப் பொறுமையாக நினைத்துப் பார்த்தால் அந்தச் சில வாழ்நாட்களிலும் பிணிகள் பலவாக இருக்கின்றன. ஆதலால் நீரை நீக்கிப் பாலைப் பருகும் அன்னப் பறவையைப் போல அறிவுடையார், நூலின் தன்மைகளை அறிந்து நல்ல நூல்களையே கற்பர்.


திருக்குறள் கல்வி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.


பொருள்
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.


கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

பொருள்
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை


திருக்குறள் உணர்த்தும் கல்வி சிந்தனைகள்

********************************************************

சுவாமி விவேகானந்தரின் பன்முகங்களை விவரிக்கும் வகையிலான கட்டுரைகள்

Friday, June 7, 2024

Man Making Education - மனிதனை உருவாக்கும் கல்வி

 




“Education

is the panacea

for all evils”

Swami Vivekananda.
"கல்வி அனைத்து தீமைகளுக்கும் நோய் தீர்க்கும் மருந்தாகும்"

It was his conviction that only through the right type of education individuals can be transformed. 
It is by imparting man making and character building education an individual becomes a complete man, a responsible citizen which is the need of today’s society.



சுவாமி விவேகானந்தரின் கல்வி -
"உன் உள்ளே உள்ள தெய்விக தன்மையை வெளியே கொண்டுவருதல் கல்வியாகும் ".

எழுமின் விழிமின் உழைமின் பாடல் 

https://www.youtube.com/watch?v=5WwHoJ6MIk8

மனிதனை உருவாக்கும் கல்வி
https://www.youtube.com/watch?v=QmEulsODjMk
பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

https://www.youtube.com/watch?v=QPM413fUHVQ


Swami Vivekananda on Education

“Education is not the amount of information that is put into your brain and runs riot there, undigested, all your life. We must have life-building, man-making, character-making assimilation of ideas.

If you have accumulated five ideas and made them your life and character, you have more education than any man who has got by heart a whole library.… If education is identical with information, the libraries are the greatest sages in the world and encyclopedias are the Rishis.”

“We want that education by which character is formed, strength of mind is increased, the intellect is expanded, and by which one can stand on one’s own feet.”

“What is education? Is it book-learning? No. Is it diverse knowledge? Not even that. The training by which the current and expression of will are brought under control and become fruitful is called education.”

“To me the very essence of education is concentration of mind, not the collecting of facts.”

“My idea of education is personal contact with the teacher — guru-griha-vasa. Without the personal life of a teacher there would be no education. … One should live from his very boyhood with one whose character is like a blazing fire and should have before him a living example of the highest teaching…. In our country, the imparting of education has always been through men of renunciation.… India had all good prospects so long as tyagis (men of renunciation) used to impart knowledge.”

“The education which does not help the common mass of people to equip themselves for the struggle for life, which does not bring out strength of character, a spirit of philanthropy, and the courage of a lion — is it worth the name? Real education is that which enables one to stand on one’s own legs.”

“The old institution of ‘living with the guru’ and similar systems of imparting education are needed. What we want are Western science coupled with Vedanta, Brahmacharya as the guidance motto, and also Shraddha and faith in one’s own self.”





புத்தக வாசிப்பின் மகிமை – Greatness of Reading Books

புத்தகங்களின் முக்கியத்துவத்தின் சில சிறப்புகள்: அறிவு வளர்ச்சி: புதிய தகவல்களையும், உலகளாவிய விஷயங்களையும் அறிய உதவுகிறது. மன அமைதி: கவலைகள...