Showing posts with label Colombo. Show all posts
Showing posts with label Colombo. Show all posts

Tuesday, October 7, 2025

Swami Vivekananda Day Personality Development Programmes - Objectives


 

சுவாமி
விவேகானந்தர்
தினம்
ஆளுமை வளர்ச்சி நிகழ்வுகள்





Swami Vivekananda Day 
Personality  Development Programme 
Objectives

  1. Personality Development.
  2. Man Making & Character Building Education.
  3. Cultural Improvements.
  4. Making Human Values part of Daily Life.
  5. Self-Sacrifice & Service to Man.
  6. Drugs & Alcohol Awareness.
  7. UN Global Goals & Individual Responsibilities
பொருளடக்கம் - Table of Contents
Personality Development Programmes



Role Model Swami Vivekananda



By any measure, Swami Vivekananda had a multifarious and multidimensional personality. 
He was a great saint, thinker, scholar, educationist, organiser, nationalist, traveler, writer, poet, musician, ambassador of Indian Culture to the West, and what not!

சுவாமி விவேகானந்தர் - ஆளுமை வளர்ச்சிக்குரிய பாடல்கள் 

'கல்வி என்பது வெறும் தகவல்களைத் திரட்டுவதல்ல,
மாறாக பண்பு நலன்களை வளர்ப்பது' 
   சுவாமி விவேகானந்தர்

மனித நேயத்தையும், ஆன்ம நேயத்தையும் உள்ளடக்கிய ஓர் மனித மேம்பாடே அனைத்திற்கும் தீர்வாகும்.

வெறும் பொருளாதார மேம்பாடு மட்டுமே இலக்காகக் கொண்டால், மனிதனுள் உறங்கிக் கொண்டிருக்கும் சுயநலம், பேராசை, போட்டி, பொறாமை ஆகிய மிருக உணர்வுகளைத் தட்டி எழுப்பும் பேராபத்தில் முடியும்.

சுவாமி விவேகானந்தரின் கூற்றின்படி மனிதன் மகத்தானவன், இறைவனின் படைப்பிலேயே உயர்வானவன். அவன் விதியை அவனே நிர்ணயிக்கின்றான். அனைத்துத் திறனும் அவனுள் ஏற்கனவே உள்ளது. அவன் எதுவாக விரும்புகின்றானோ, அவன் அதுவாகவே ஆகின்றான்.

மாணவர் வள முன்னேற்ற  நிகழ்வுகள் நோக்கம் 

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஐந்து முக்கிய குணங்களை பின்பற்ற வேண்டும்.
  1.  உண்மை பேசுவது,
  2.  கடவுளிடம் நம்பிக்கை கொள்வது, 
  3. வாழ்வில் அப்பழுக்கற்ற தன்மை,
  4. சுயநலமின்மை 
  5. சுயநலமற்ற சேவை.
 இந்த ஐந்து குணங்களும் ஒரு மனிதனுக்குத் தன் வாழ்வில் உன்னதத்தைப் பெற்றுத் தரும்.

அரிதான இம்மனிதப் பிறப்பை அலட்சியம் செய்யாமல், பொறுப்போடு வாழ்ந்து தன்னையும் உயர்த்திக்கொண்டு, தன்னைச் சுற்றியுள்ள இயற்கையையும் பேணிக்காத்து, ஒரு புதிய இயல்பு உருவாக காரணமாக இருப்பதே விவேகமாகும்.


நிகழ்ச்சிகளை நடத்துவதற்குரிய
ஆசிரியர்களுக்கும் தொண்டர்களுக்குமான வளங்கள்


எது சிறந்த கல்வி தெரியுமா? – சுவாமி விவேகானந்தர்

மனிதனுக்குள் ஏற்கெனவே பரிபூரணத் தன்மை என்பது இருக்கிறது. அதை வெளிப்படுத்துவது தான் கல்வியாகும். எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்தெழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.

நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தார் என்று செல்கிறோம். அந்த புவியீர்ப்புச் சக்தி எங்காவது ஒரு மூலையில் நியூட்டன் வருவார் என்று உட்கார்ந்து காத்துக்கொண்டிருந்ததா? அது அவர் உள்ளத்திலேயே இருந்தது. சரியான நேரம் வரவே அதை அவர் கண்டுபிடித்தார்.

நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதாகவும், மனவலிமையை வளர்ப்பதாகவும், விரிந்த அறிவைத் தருவதாகவும், ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக்கொண்டு நிற்கச் செய்வதாகவும் இருக்கக்கூடிய கல்விதான் நமக்குத் தேவை.

மனஉறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும், கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, (ஆக்கபூர்வமாகப்) பயன் தரும் வகையில் அமைவதற்கு உரிய பயிற்சிதான் கல்வியாகும்.

வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் ஒரு போராட்டம். இதை மக்கள் எதிர்கொள்வதற்கும், அதில் வெற்றி பெறுவதற்கும் உரிய தகுதியைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். உறுதியான நல்ல ஒழுக்கத்தைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மிகப் பெரிய ஆர்வத்தைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். சிங்கம் போன்ற மனஉறுதியை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுவதாகக் கல்வி இருக்க வேண்டும். கல்வி என்பது ஒருவனுக்குத் தன்னம்பிக்கையைத் தருவதாக இருக்க வேண்டும். கல்வி, ஒருவன் தன்னுடைய சொந்தக் கால்களில் நிற்பதற்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும்.

*****************************************


சுவாமி விவேகானந்தரின் இளைஞர்களின் மீதான நம்பிக்கை:

சுவாமி விவேகானந்தர் இளைஞர்களின் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார். இளைஞர்களின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையால்தான், “100 இளைஞர் களை தாருங்கள் உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்" என்றார்.

விவேகானந்தரின் கருத்துகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை தங்களின் மனத்தில் கொண்டு, செயற்கரிய செயல்களை செய்பவர்களாக மாணவர்கள் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும்.

ஒவ்வொரு இளைஞனும் தன்னை முதலில் உயர்த்திக் கொள்ள வேண்டும். அதன்பின் தனக்கு வந்த உயர்வைக் கொண்டு, அதற்குக் காரணமாக இருந்த சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர்.

சாதி, மத, இன பேதங்களைக் கடந்து ஒன்றுபட்ட கலாச்சாரமே நோக்கம். இதில் மலிவான சிந்தனைகளுக்கு இடமே இல்லை.

பணம், பதவி, புகழ் போன்ற சாதாரண இலக்குகளை நோக்கமாகக் கொள்ளாமல் உலக நன்மை என்னும் பரந்துபட்ட சிந்தனையை இளைஞர்கள் தங்களின் மனத்தில் கொண்டு, உயர்ந்த நோக்கத்தை தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும்.





நமது உலகத்தை உருமாற்றுதல்
 - Transforming our world
அடிப்படை தியாகமும் சேவையும்
 - Foundation is Sacrifice & Service
  • ஏழ்மை இன்மை: எல்லா இடங்களிலும், எல்லா வகைகளிலுமான ஏழ்மையை ஒழிக்க வேண்டும்.
  • பசி இன்மை: பசியை ஒழித்தல், பட்டினியை விரட்டுதல், உணவுப் பாதுகாப்பை அடைதல், ஊட்டச்சத்து மேம்பாட்டையும் எய்துதல் மற்றும் நிலையான, வளங்குன்றா வேளாண்மையை ஊக்குவித்தல்.
  • நல்ல ஆரோக்கியம்: எல்லோருக்கும், எல்லா வயதிலும், நலம்குன்றா உயிர்வாழ்வை உறுதிசெய்தலும், எல்லாருக்கும் எல்லா வயதிலும் நலவாழ்வை முன்னெடுத்தலும்.
  • தரமான கல்வி: யாவரையும் உள்ளடக்கிய, சமவாய்ப்புள்ள, சமத்துவமான, தரமான கல்வியை உறுதிப்படுத்துதல், மற்றும் எல்லோருக்கும் வாழ்நாள் முழுதுமான கல்வி கற்றலுக்கான வாய்ப்பை ஊக்குவித்தல்.
  • பாலின சமத்துவம்: பாலின சமத்துவம் அடைதல், மற்றும் அனைத்து பெண்கள், சிறுமிகளுக்கும் அதிகாரமளித்தலும்.
  • தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம்: எல்லோருக்கும் நீரும், துப்புரவும் கிடைக்கச் செய்தலும் அவற்றை நீடிக்கத் தக்கவாறு சுகாதாரத்தின் நிலையான மேலாண்மை செய்தலும்.
  • புதுப்பிக்கவல்ல மற்றும் மலிவான சக்தி: எல்லோருக்கும் மலிவான, நம்பகமான, நிலையான மற்றும் புதுமையான முறை ஆற்றல் (எரிசக்தி) கிடைப்பதை உறுதிசெய்து கொள்ளுதல்.
  • நல்ல பணிகள் மற்றும் [பொருளாதாரம்|பொருளாதாரங்கள்]]: எல்லோருக்கும் நிலையான, யாவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான, நீடிக்கத்தகு பொருளாதார வளர்ச்சி, முழுமையான, ஆக்கவளம் கொண்ட, கண்ணியமான பணி.
  • புதுமை மற்றும் நல்ல உள்கட்டமைப்பு: தாங்கும் திறன் கொண்ட உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், உள்ளடக்கிய மற்றும் வளங்குன்றாத் தொழில்மயமாதலை முன்னெடுத்தல், புதுமையாக்கத்தைப் பேணி வளர்த்தல்.
  • சமமின்மையை குறைத்தல்: நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கிடையேயுமான சமமின்மையை, சமத்துவமின்மையைக் குறைத்தல்.
  • நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்: நகரங்களையும், மனித சமூகங்களையும், குடியிருப்புகளையும் எல்லாரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பானதாக, தாங்கும் திறன் கொண்ட, நீடிக்கத்தக்கனவாக ஆக்குதல்.
  • வளங்களை பொறுப்பான முறையில் பயன்படுத்துதல்: நிலையான, நீடிக்கத்தகு முறையிலான நுகர்வு மற்றும் உற்பத்தியை, உற்பத்தி வடிவங்களை உறுதிசெய்து கொள்ளுதல்.
  • வானிலை நடவடிக்கை: காலநிலை மாறுபாட்டையும் அதன் பாதிப்புகளையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான உடனடி நடவடிக்கை எடுத்தல்.
  • நிலைப்பாடுடைய பெருங்கடல்கள்: பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல்சார் வளங்களைப் பேணுதலும், வளங்குன்றா வளர்ச்சிக்காக அவற்றை நீடிக்கத்தகுந்த விதத்தில் பயன்படுத்தலும்.
  • நிலத்தின் நிலைப்பாடான பயன்பாடு: நில சூழலியல் அமைப்புகளை பாதுகாத்து, மீட்டமைத்து, அவற்றின் நீடித்த பயன்பாட்டை ஊக்குவித்தல், நீடிக்கத்தக்கவாறு காடுகளை நிலைப்பாடான முறையில் நிர்வகித்தல், பாலைவனமாதலுக்கு எதிராகப் போரிடல், நிலச் சீர்கேட்டைத் தடுத்து மீட்டமைத்தல், மற்றும் பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்துதல்.
  • அமைதி மற்றும் நீதி: நிலையான, வளங்குன்றா வளர்ச்சிக்காக அமைதியான, யாவரையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்குதல், அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்தல், எல்லா நிலைகளிலும் சிறப்பான, பொறுப்பான மற்றும் உள்ளடக்கிய சூழல்களை உருவாக்குதல். செயல்திறமிக்க, பதிலளிக்கும் பொறுப்புடைய, யாவரையும் உள்ளடக்கிய நிறுவனங்களை எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்துதல்.
  • நிலையான அபிவிருத்திக்கான கூட்டமைப்புகள்: நிலையான அபிவிருத்திக்காக செயல்பாட்டு முறைகளை பலப்படுத்துதல், வளங்குன்றா வளர்ச்சிக்கான உலகளாவிய கூட்டமைப்புகளுக்கு புத்துயிர் அளித்தல்.

சுவாமி விவேகானந்தரின் பன்முகங்களை விவரிக்கும் வகையிலான கட்டுரைகள்


Ramakrishna Mission, Colombo.

Current A/c No. 009010001222

SWIFT CODE: HBLILKLX
Bank Code 7083
Branch Code 009

Hatton National Bank Ltd,
Wellawatta Branch, 100, 102, Galle Road,
Colombo 6.

For more information contact rkmcey@gmail.com

Donations can be sent to the following bank account for organizing programmes in Schools.

The following Costs are involved to conduct a programme.

  • Travelling & Transport
  • Printing Pamphlets
  • Gift of Books
  • Educational Materials
  • Refreshments to Participants

Ramakrishna Mission (Ceylon Branch)
40, Ramakrishna Road, 
Colombo 6.
Email - rkmcey@gmail.com
Phone - 0094-11-2588253




Sri Ramakrishna’s Times

Sri Ramakrishna appeared on the scene in Calcutta which was then the capital of British India, at a time when Bengalees were taking to English education on a large scale, had developed doubts about our religion, were attracted to reform, and generally abandoning their age old ‘dharma’ and taking to secular ways. Sri Ramakrishna was born in 1836- the year in which Macaulay’s scheme of education was introduced in India!





Monday, September 16, 2024

Velayutham Maha Vidyalayam - Point Pedro - 11-09-2024


 


Personality Development Programme

8.00 am to 9.30 am


Participants - 120
















































மேலதிக தகவலுக்கு முக்கியமான இணைப்புகள்


**********************************

நீயே உந்தன் விதியை படைக்கும்......
பாடகர்: சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மகாராஜ் அவர்கள்.


நீயே உந்தன் விதியை படைக்கும் ஆண்டவன் ஆகின்றாய்
நினைத்தால் அதனை மாற்றியமைத்திட தகுந்தவனாகின்றாய்

நாமே படைக்கும் விதியைத்தவிர வேறொரு விதியில்லை
இதை நாமே உணர்ந்தால் பிறர்மேல் பழியை சுமத்திடவழியில்லை
எண்ணும் எண்ங்கள் நாம் பேசும் வார்த்தைகள்
செய்யும் காரியங்கள் எல்லாம் விதியின் காரணங்கள் ------ நீீயே

யாரோபடைத்த விதியை மாற்ற நம்மால் முடியாது
நாமே படைத்ததை நாமே அழித்திட தடைகள்கிடையாது
கடந்தகால செயல்களின் விளைவே விதியாய் வாய்த்தது
நிகழும்கால செயல்கள் நாளை விதியாய் வருகிறது - இன்று நிகழும்கால செயல்கள் நாளை விதியாய் வருகிறது --------- நீீயே


விதியே என்று வீழ்ந்தவனுக்கு கதியே என்றும் கிடையாது
விதியை வெல்லும் வல்லமை உனக்குள் உணர்ந்தால் துயரேகிடையாது
சோம்பல் வாழ்க்கை வாழும் வீணர்கள் விதியை நம்பிடுவார்
சுறுசுறு என்று இயங்கும் இளைஞர்கள்விதியை வென்றிடுவார் --- நீீயே

ஒன்றாய் புறப்படுவோம் நன்றாய் புறப்படுவோம்
நாமே நமது விதியை படைக்க இன்றே புறப்படுவோம் --- நீீயே

********************************

Ramakrishna Mission Library, Colombo.
Online Free Books

இராமகிருஷ்ண மிஷன் நூலகம், கொழும்பு.




Friday, April 26, 2024

ஆளுமை வளர்ச்சிக்கு தியானம் - சுவாமி விவேகானந்தர்

 




Meditation
for Personality Development,

Swami Vivekananda

ஆளுமை வளர்ச்சிக்கு
தியானம்


“தியானம் என்றால் மனத்தை தன் பக்கம் திருப்புவது . மனம் அனைத்து எண்ண அலைகளையும் நிறுத்துகிறபோது உலகம் நின்றுவிடுகிறது. உங்கள் உணர்வு விரிவடைகிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் தியானம் செய்யும் போது உங்கள் வளர்ச்சியை நிலைநிறுத்துவீர்கள்"

-சுவாமி விவேகானந்தர்

“Meditation means the mind is turned back upon itself. The mind stops all the thought-waves and the world stops. Your consciousness expands. Every time you meditate you will keep your growth”

-Swami Vivekananda

சீடர் : சுவாமிஜி தியானத்தின் உண்மையான இயல்பு என்ன?

சுவாமிஜி: தியானம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது மனத்தைக் குவியச் செய்வது. மனம் ஒரு பொருளின்மீது ஒருமைப்பட்டு நிலைபெறுமானால் பிறகு அதனை எந்தப் பொருளின் மீதும் குவிக்கலாம்.

சீடர்: உருவத் தியானம் அருவத் தியானம் என்று இரண்டுவகை தியானங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் என்ன? இவற்றுள் எது மேலானது?

சுவாமிஜி:முதலில் மனத்தை ஏதாவது ஒரு பொருளின்மீது குவித்துத் தியானத்தைத் தொடங்க வேண்டும். ஒரு சமயம் நான் என் மனத்தை ஒரு கறுப்புப் புள்ளியின் மீது குவியும்படிச் செய்தேன் . கடைசியில் என்னால் அந்தப் புள்ளியைப் பார்க்க முடியவில்லை: அந்தப் புள்ளி என் முன்னால் இருக்கிறது என்பதைக்கூடக் காண முடிய வில்லை. மனம் வழக்கம்போல் இயங்கவில்லை. மனம் வேலை செய்வதால் எழும் எந்தவிதமான அலையும் எழவில்லை காற்று சிறிதும் வீசாத அசைவே இல்லாத கடல்போல் இருந்தது. அந்த நிலையில் புலன்களைக் கடந்த உண்மையை நான் சிறிது உணர்வதுண்டு. எனவே மிகச் சாதாரண புறப் பொருளின் மீது தியானம் செய்வதுகூட மன ஒருமைப்பாட்டை ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறேன். ஆனால் மனத்திற்குப் பிடித்த பொருள் மீது தியானம் செய்யும்போது மனம் மிகவும் எளிதாக அமைதி அடைகிறது என்பதும் உண்மை. இந்த நாட்டில் இத்தனை தெய்வ வடிவங்களை வழிபடுவதற்கு இதுதான் காரணம். இத்தகைய வழிபாட்டிலிருந்து எத்தகைய அற்புதமான கலை வளர்ந்துள்ளது! ஆனால் இப்போது அத்தகைய நிலை இல்லை என்றாலும் உண்மை என்னவென்றால் தியானப்பொருள் எல்லோருக்கும் ஒன்றாக இருக்க முடியாது என்பதே மக்கள் தாங்கள் எந்தப் புறப்பொருளைத் தியானித்து நிறைநிலையை அடைந்தார்களோ அதை மட்டும் உலகிற்கு போதித்தார்கள். இந்தப்புறப் பொருட்கள் எல்லாம் பூரண மன அமைதியை அடைவதற்கு உதவுபவை மட்டுமே என்றஉண்மையை மறந்து உருவங்களை அளவுகடந்து கொண்டாடினார்கள் வழிகளில் முழுக் கவனத்தையும் செலுத்தினார்களே தவிரஅது சென்று சேரும் முடிவை மறந்து விட்டார்கள் உண்மையில் மனத்தில் அலைகளே இல்லாமல் செய்வது தான் நோக்கம் ஆனால் மனம் ஏதாவது ஒரு பொருளின் மீது ஆழ்ந்து ஒன்றாமல் இதை அடைய முடியாது.

சீடர் :மனம் ஒரு பொருள் மீது முழுமையாக ஆழ்ந்து அதனுடன் ஒன்றிவிட்டால் அது நமக்கு பிரம்மஞானத்தை எப்படித் தரும்?

சுவாமிஜி: தரும் நாம் தியானிக்கும் பொருளின் வடிவத்தை மனம் முதலில் அடைந்தாலும் பிறகு அந்த உணர்வு மறைந்துவிடும் அதன் பிறகு தூய்மையான உண்மை இருப்பின் அனுபவம் எஞ்சும்.

சீடர்: சரி மன ஒருமைப்பாட்டை அடைந்த பிறகும் ஆசைகள் தோன்றுகின்றனவே அது எப்படி?

சுவாமிஜி: அவை சம்ஸ்காரங்களால் உண்டாகின்றன. புத்தர் சமாதியில் ஒன்றப்போகின்ற நேரத்தில் காமன் வெளிப்பட்டான் .காமன் என்று எதுவும் வெளியே உண்மையில் இல்லை முந்தைய சம்ஸ்காரங்களே நிழல் வடிவில் வெளியில் தோன்றியது.

சீடர் : ஆனால் நிறைநிலையை அடையுமுன் பல வகையான பயங்கர அனுபவங்களை அடைய வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவையும் மனத்தின் கற்பனை தானா?

சுவாமிஜி: கற்பனை அல்லாமல் வேறு என்ன? அவை மனத்தின் புறத் தோற்றங்கள் என்பதைச் சாதகன் அந்த வேளையில் அறிவதில்லை மனத்திற்கு வெளியே எதுவும் இல்லை. நீ வெளியே இருப்பதாகக் காண்கின்ற உலகம்கூட வெளியில் இல்லை. எல்லாமே மனத்தின் கற்பனைதான். மனம் அலைகளற்றுப் போகும் போது அது பிரம்ம உணர்வைப் பிரதிபலிக்கிறது அப்போது எல்லா உலகங்களின் காட்சிகளும் ஏற்படலாம். யம் யம் லோகம் மனஸா ஸம்விபாதி – எந்த உலகத்தை காண வேண்டும் என்று நினைக்கிறானோ அதை உடனடியாகக் காண முடியும் அவன் எதை எண்ணுகிறானோ அது உடனே கைகூடும். நினைப்பது நடைபெறுகின்ற இத்தகைய சத்திய சங்கல்ப நிலையை அடைந்த பிறகும் எச்சரிக்கையாக இருந்து எந்த ஆசைகளுக்கும் அடிமையாகாமல் இருப்பவன் பிரம்ம ஞானம் பெறுகிறான். அந்த நிலையை அடைந்த பிறகு வழிதவறியவன் பல்வேறு சித்திகளைப் பெறுவான் ஆனால் அறுதி லட்சியத்திலிருந்து வழுவி விடுவான். இவ்வாறு சொல்லிவிட்டு சுவாமிஜி, சிவ சிவ என்று கூறியபடியே மீண்டும் தொடர்ந்தார்:

வாழ்க்கையின் இந்த மேலான ரகசியத்தைத் தியாகத்தின் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும் தியாகம் தியாகம்,தியாகம் இதுவே உங்கள் வாழ்க்கையின் மூல மந்திரம் ஆகட்டும் .

ஸர்வம் வஸ்து பயான்விதம் புவிந்ருணாம் வைராக்யமேவாபயம்

மனிதர்களும் உலகில் உள்ள பொருட்களும் அச்சத்தால் குழப்பட்டிருக்கின்றன வைராக்கியம்(துறவு) மட்டுமே பயமின்மையைத் தரும்.











புத்தக வாசிப்பின் மகிமை – Greatness of Reading Books

புத்தகங்களின் முக்கியத்துவத்தின் சில சிறப்புகள்: அறிவு வளர்ச்சி: புதிய தகவல்களையும், உலகளாவிய விஷயங்களையும் அறிய உதவுகிறது. மன அமைதி: கவலைகள...