|
Personality Development Programme 7.30 am to 9.00 am Participants - 800 |
மனிதா நீ மகத்தானவன்... பாடல்
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா.
பாடகர்:
சுவாமி ஹரிவர்த்தானந்தஜி மகாராஜ்
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா.
ஒருமுகமாய் மனம் குவித்தல் ஆற்றல் பொங்கியேழும்
அதை ஒரு செயலில் திருப்பிவிட்டால் வெற்றி நிற்சயம்
ஒருமுகமாய் மனம் குவித்தல் ஆற்றல் பொங்கியேழும்
அதை ஒரு செயலில் திருப்பிவிட்டால் வெற்றி நிற்சயம்
உறுதியோடு உழைக்கும் தன்மை உன்னிடம் இருந்தால்
நீ நினைப்பதெல்லாம் நிறைவேறும் நம்பிக்கைகொண்டால்
உறுதியோடு உழைக்கும் தன்மை உன்னிடம் இருந்தால்
நீ நினைப்பதெல்லாம் நிறைவேறும் நம்பிக்கைகொண்டால்
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா.
கடலைக்குடிக்கலாம் காற்றை நிறுத்தலாம்
கடலைக்குடிக்கலாம் நீ காற்றை நிறுத்தலாம்
உன் மனதை அடக்கினால் இந்த உலகைவெல்லலாம்
உன் மனதை அடக்கினால் இந்த உலகைவெல்லலாம்
இறப்பை தடுக்கலாம் மீண்டும் பிறக்க மறுக்கலாம்
இறப்பை தடுக்கலாம் மீண்டும் பிறக்க மறுக்கலாம்
இந்த இரவும் பகலும் இல்லா உலகில் என்றும் மகிழலாம்
இந்த இரவும் பகலும் இல்லா உலகில் என்றும் மகிழலாம்
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா.
வெற்றி தோல்வி இரண்டுமே வாழ்க்கையில் இருக்கு
அதில் கற்றுக்கொள்ளும் பாடம்தானே வீரனுக்கழகு
வெற்றி தோல்வி இரண்டுமே வாழ்க்கையில் இருக்கு
அதில் கற்றுக்கொள்ளும் பாடம்தானே வீரனுக்கழகு
தோல்விகண்டால் வாழ்க்கையில் நீ துவண்டுவிடாதே
தோல்விகண்டால் வாழ்க்கையில் நீ துவண்டுவிடாதே
அதில் பாடம் கற்று மீண்டும் முயல மறந்துவிடாதே
அதில் பாடம் கற்று மீண்டும் முயல மறந்துவிடாதே
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா.
வெற்றிபெற்ற மனிதரெல்லாம் பாடம்கற்றதெங்கே
தோல்விப்படிகள் ஏறிப்பெறா வெற்றிமாலையெங்கே
வெற்றிபெற்ற மனிதரெல்லாம் பாடம்கற்றதெங்கே
தோல்விப்படிகள் ஏறிப்பெறா வெற்றிமாலையெங்கே
பிறந்தகன்று எழுந்தபோது விழுந்ததில்லையா
பிறந்தகன்று எழுந்தபோது விழுந்ததில்லையா
அது மீண்டும் மீண்டும் எழுந்து நடந்து ஓடவில்லையா
மீண்டும் மீண்டும் எழுந்து நடந்து ஓடவில்லையா
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா.
இல்லை என்ற வார்த்தை தன்னை என்றும் சொல்லாதே
இயலாது என்று கூறி நீயும் படுத்துவிடாதே
இல்லை என்ற வார்த்தை தன்னை என்றும்சொல்லாதே
இயலாது என்று கூறி நீயும் படுத்துவிடாதே
எல்லையில்லா வலிமையெல்லாம் உனக்குள்ளிருக்கு
எல்லையில்லா வலிமையெல்லாம் உனக்குள்ளிருக்கு
நீ காலம் இடம் கடந்தவன் இதை மனதில் நிறுத்து
நீ காலம் இடம் கடந்தவன் இதை மனதில் நிறுத்து
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா.
வெற்றிதரும் ஆற்றல்யாவும் உனக்குள்ளிருக்கு
வெற்றிதரும் ஆற்றல்யாவும் உனக்குள்ளிருக்கு
அதை பெற்றுத்தரும் சாவி உந்தன் மனதை அடக்கு
அதை பெற்றுத்தரும் சாவி உந்தன் மனதை அடக்கு
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா.
No comments:
Post a Comment