
புத்தகங்களின் முக்கியத்துவத்தின் சில சிறப்புகள்:
- அறிவு வளர்ச்சி: புதிய தகவல்களையும், உலகளாவிய விஷயங்களையும் அறிய உதவுகிறது.
- மன அமைதி: கவலைகளை மறந்து மன அழுத்தத்தைக் குறைத்து, அமைதியைத் தருகிறது.
- படைப்பாற்றல்: சிந்திக்கும் திறனை அதிகரித்து, புதியன படைக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
- சொல்வளம்: வாசிப்பு நமது மொழித் திறனையும், எழுதும் ஆற்றலையும் பெருக்கும்.
புத்தகம் வாசிப்பவன் இறப்பதற்கு முன் ஆயிரம் வாழ்க்கையை வாழ்கிறான். ஆனால், வாசிக்காதவன் ஒரே வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறான். – George R.R.Martin
எவ்வளவு வாசிக்கிறாயோ, அவ்வளவு தெரிந்துக்கொள்வாய். எவ்வளவு கற்றுக்கொள்கிறாயோ, அவ்வளவு பயணம் செய்வாய். – Dr. Seuss
புத்தகமில்லாத அறை என்பது, உயிரில்லாத உடலுக்கு சமம். – Marcus Tullicus Cicero
புத்தகங்களே மிகவும் அமைதியான மற்றும் நிலையான நண்பர்களாவார்கள். அதேபோல் அவை புத்திசாலியான ஆலோசகர்கள் மற்றும் பொருமையான ஆசிரியர்களும் கூட. – Charles W. Eliot
பிரதிபலிக்காமல் படிப்பது என்பது, சாப்பிட்டுவிட்டு ஜீரணமாகாததற்கு சமம். – Edmund Burke
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதேபோல் மூளைக்கு படிப்பது. – Joseph Addison
புத்தகங்கள் - நீங்கள் கைகளில் ஏந்தியிருக்கும் கனவுகள். – Neil Gaiman
புத்தகங்கள் மிகவும் ஆபத்தானவை. சிறந்த ஒருவருக்கு மட்டுமே அந்த புத்தகத்தின் அட்டையில் “ இது உங்களின் வாழ்க்கையையே மாற்றும்” என்று எழுதியிருக்கும். – Helen Exley
ஒரு புத்தக்கத்தை படிப்பது என்பது ஒரே ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவது போல். – Diane Duane
ஆணோ? பெண்ணோ? யாராக இருந்தாலும், புத்தகத்தை விரும்பாதவர்கள், முட்டாள்களே. – Jane Austen
ஒரு நல்ல புத்தகம் கிடைப்பது, எனது வாழ்வின் ஒரு சிறப்பான நிகழ்வு.- Stendhal
புத்தகம் என்பது நம் ஆன்மாவின் கண்ணாடி. – Virginia Woolf
வாசிப்பது என்பது உட்கார்ந்த இடத்திலேயே பல இடங்களுக்குப் போக வைக்கும் ஒரு மாயாஜாலம். – Mason Cooley
புத்தகத்தை எரிப்பது ஒரு கொடூரம் என்றால், அதனைப் படிக்காதது அதைவிட மிகப்பெரிய கொடூரமாகும். – Joseph Brodsky
புத்தகத்தைப் போல ஒரு விசுவாசமான நண்பன் இல்லை. – Ernest Hemingway
ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது,
*ஒரு நூலகம் கட்டுவேன்* என்று பதிலளித்தாராம் மகாத்மா...
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் *ஜவஹர்லால் நேரு*...
என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் *பெட்ரண்ட் ரஸல்*...
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் *ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்*...
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் *நெல்சன் மண்டேலா*...
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி *லெனின்* கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்...
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் *சார்லிசாப்லின்*...
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் *வின்ஸ்டன் சர்ச்சில்*...
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் *மார்டின் லூதர்கிங்*...
தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் *பகத்சிங்*...
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன். *ஆபிரகாம் லிங்கன்*...
ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி– *ஜூலியஸ் சீசர்*...
உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்.. – *டெஸ்கார்டஸ்*...
போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு… – *இங்கர்சால்*...
சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– *பிரான்சிஸ் பேக்கன்*...
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே! – *லெனின்*...
உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை! – *ஆஸ்கார் வைல்ட்*...
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு! – *சிக்மண்ட் ஃப்ராய்ட்*...
பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ… – *மாசேதுங்*...
வாசிக்கும் பழக்கம் ஓர் மனிதனை முழு மனிதனாக மாற்றிவிடும்...
உலகில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்கள் பலரும் நூல்கள் வழியாகத் தான் வாழ்வின் வெளிச்சத்தை நோக்கி பயணித்தனர்...
https://svdayceylon.blogspot.com/2023/10/swami-vivekananda-day-programmes.html
https://rkmceylon.blogspot.com/2022/01/ramakrishna-mission-ceylon-branch.html




No comments:
Post a Comment