|
சுவாமி விவேகானந்தர் தினம் ஆளுமை வளர்ச்சி நிகழ்வுகள் |
Swami Vivekananda Day
Personality Development Programme
Objectives
Personality Development Programmes
By any measure, Swami Vivekananda had a multifarious and multidimensional personality.
- Personality Development.
- Man Making & Character Building Education.
- Cultural Improvements.
- Making Human Values part of Daily Life.
- Self-Sacrifice & Service to Man.
- Drugs & Alcohol Awareness.
- UN Global Goals & Individual Responsibilities
Personality Development Programmes
Role Model Swami Vivekananda
He was a great saint, thinker, scholar, educationist, organiser, nationalist, traveler, writer, poet, musician, ambassador of Indian Culture to the West, and what not!
சுவாமி விவேகானந்தர் - ஆளுமை வளர்ச்சிக்குரிய பாடல்கள்
'கல்வி என்பது வெறும் தகவல்களைத் திரட்டுவதல்ல,
மாறாக பண்பு நலன்களை வளர்ப்பது' சுவாமி விவேகானந்தர்
மனித நேயத்தையும், ஆன்ம நேயத்தையும் உள்ளடக்கிய ஓர் மனித மேம்பாடே அனைத்திற்கும் தீர்வாகும்.
மாறாக பண்பு நலன்களை வளர்ப்பது' சுவாமி விவேகானந்தர்
வெறும் பொருளாதார மேம்பாடு மட்டுமே இலக்காகக் கொண்டால், மனிதனுள் உறங்கிக் கொண்டிருக்கும் சுயநலம், பேராசை, போட்டி, பொறாமை ஆகிய மிருக உணர்வுகளைத் தட்டி எழுப்பும் பேராபத்தில் முடியும்.
சுவாமி விவேகானந்தரின் கூற்றின்படி மனிதன் மகத்தானவன், இறைவனின் படைப்பிலேயே உயர்வானவன். அவன் விதியை அவனே நிர்ணயிக்கின்றான். அனைத்துத் திறனும் அவனுள் ஏற்கனவே உள்ளது. அவன் எதுவாக விரும்புகின்றானோ, அவன் அதுவாகவே ஆகின்றான்.
மாணவர் வள முன்னேற்ற நிகழ்வுகள் நோக்கம்
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஐந்து முக்கிய குணங்களை பின்பற்ற வேண்டும்.
- உண்மை பேசுவது,
- கடவுளிடம் நம்பிக்கை கொள்வது,
- வாழ்வில் அப்பழுக்கற்ற தன்மை,
- சுயநலமின்மை
- சுயநலமற்ற சேவை.
இந்த ஐந்து குணங்களும் ஒரு மனிதனுக்குத் தன் வாழ்வில் உன்னதத்தைப் பெற்றுத் தரும்.
அரிதான இம்மனிதப் பிறப்பை அலட்சியம் செய்யாமல், பொறுப்போடு வாழ்ந்து தன்னையும் உயர்த்திக்கொண்டு, தன்னைச் சுற்றியுள்ள இயற்கையையும் பேணிக்காத்து, ஒரு புதிய இயல்பு உருவாக காரணமாக இருப்பதே விவேகமாகும்.
நிகழ்ச்சிகளை நடத்துவதற்குரிய
ஆசிரியர்களுக்கும் தொண்டர்களுக்குமான வளங்கள்
ஆசிரியர்களுக்கும் தொண்டர்களுக்குமான வளங்கள்
- Pamphlets for Personality Development of Students
- வழிகாட்டல் தியானம் - Guided Meditation - 10 Minutes
- Ramakrishna Movement In Tamil - Shanmugam IAS Academy
- மாணவருக்கு பாடல்கள் - சுவாமி விவேகானந்தரின் எழுச்சித்தரும் கருத்துக்கள்
- இராமகிருஷ்ண மிஷன் - தமிழ் நூல்கள்இலவசமாகப் படிக்க https://publications.rkmm.org/tamil
- இராமகிருஷ்ண மிஷன், கொழும்பு இணைய வாசிகசாலை
- https://rkmceylon.weebly.com
- Ramakrishna Mission Books Online Library in All Languages https://publications.rkmm.org
எது சிறந்த கல்வி தெரியுமா? – சுவாமி விவேகானந்தர்
மனிதனுக்குள் ஏற்கெனவே பரிபூரணத் தன்மை என்பது இருக்கிறது. அதை வெளிப்படுத்துவது தான் கல்வியாகும். எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்தெழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.
நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தார் என்று செல்கிறோம். அந்த புவியீர்ப்புச் சக்தி எங்காவது ஒரு மூலையில் நியூட்டன் வருவார் என்று உட்கார்ந்து காத்துக்கொண்டிருந்ததா? அது அவர் உள்ளத்திலேயே இருந்தது. சரியான நேரம் வரவே அதை அவர் கண்டுபிடித்தார்.
நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதாகவும், மனவலிமையை வளர்ப்பதாகவும், விரிந்த அறிவைத் தருவதாகவும், ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக்கொண்டு நிற்கச் செய்வதாகவும் இருக்கக்கூடிய கல்விதான் நமக்குத் தேவை.
மனஉறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும், கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, (ஆக்கபூர்வமாகப்) பயன் தரும் வகையில் அமைவதற்கு உரிய பயிற்சிதான் கல்வியாகும்.
வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் ஒரு போராட்டம். இதை மக்கள் எதிர்கொள்வதற்கும், அதில் வெற்றி பெறுவதற்கும் உரிய தகுதியைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். உறுதியான நல்ல ஒழுக்கத்தைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மிகப் பெரிய ஆர்வத்தைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். சிங்கம் போன்ற மனஉறுதியை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுவதாகக் கல்வி இருக்க வேண்டும். கல்வி என்பது ஒருவனுக்குத் தன்னம்பிக்கையைத் தருவதாக இருக்க வேண்டும். கல்வி, ஒருவன் தன்னுடைய சொந்தக் கால்களில் நிற்பதற்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும்.
*****************************************
சுவாமி விவேகானந்தரின் இளைஞர்களின் மீதான நம்பிக்கை:
சுவாமி விவேகானந்தர் இளைஞர்களின் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார். இளைஞர்களின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையால்தான், “100 இளைஞர் களை தாருங்கள் உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்" என்றார்.
விவேகானந்தரின் கருத்துகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை தங்களின் மனத்தில் கொண்டு, செயற்கரிய செயல்களை செய்பவர்களாக மாணவர்கள் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும்.
ஒவ்வொரு இளைஞனும் தன்னை முதலில் உயர்த்திக் கொள்ள வேண்டும். அதன்பின் தனக்கு வந்த உயர்வைக் கொண்டு, அதற்குக் காரணமாக இருந்த சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர்.
சாதி, மத, இன பேதங்களைக் கடந்து ஒன்றுபட்ட கலாச்சாரமே நோக்கம். இதில் மலிவான சிந்தனைகளுக்கு இடமே இல்லை.
பணம், பதவி, புகழ் போன்ற சாதாரண இலக்குகளை நோக்கமாகக் கொள்ளாமல் உலக நன்மை என்னும் பரந்துபட்ட சிந்தனையை இளைஞர்கள் தங்களின் மனத்தில் கொண்டு, உயர்ந்த நோக்கத்தை தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும்.
நமது உலகத்தை உருமாற்றுதல்
- Transforming our world
அடிப்படை தியாகமும் சேவையும்
அடிப்படை தியாகமும் சேவையும்
- Foundation is Sacrifice & Service
- ஏழ்மை இன்மை: எல்லா இடங்களிலும், எல்லா வகைகளிலுமான ஏழ்மையை ஒழிக்க வேண்டும்.
- பசி இன்மை: பசியை ஒழித்தல், பட்டினியை விரட்டுதல், உணவுப் பாதுகாப்பை அடைதல், ஊட்டச்சத்து மேம்பாட்டையும் எய்துதல் மற்றும் நிலையான, வளங்குன்றா வேளாண்மையை ஊக்குவித்தல்.
- நல்ல ஆரோக்கியம்: எல்லோருக்கும், எல்லா வயதிலும், நலம்குன்றா உயிர்வாழ்வை உறுதிசெய்தலும், எல்லாருக்கும் எல்லா வயதிலும் நலவாழ்வை முன்னெடுத்தலும்.
- தரமான கல்வி: யாவரையும் உள்ளடக்கிய, சமவாய்ப்புள்ள, சமத்துவமான, தரமான கல்வியை உறுதிப்படுத்துதல், மற்றும் எல்லோருக்கும் வாழ்நாள் முழுதுமான கல்வி கற்றலுக்கான வாய்ப்பை ஊக்குவித்தல்.
- பாலின சமத்துவம்: பாலின சமத்துவம் அடைதல், மற்றும் அனைத்து பெண்கள், சிறுமிகளுக்கும் அதிகாரமளித்தலும்.
- தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம்: எல்லோருக்கும் நீரும், துப்புரவும் கிடைக்கச் செய்தலும் அவற்றை நீடிக்கத் தக்கவாறு சுகாதாரத்தின் நிலையான மேலாண்மை செய்தலும்.
- புதுப்பிக்கவல்ல மற்றும் மலிவான சக்தி: எல்லோருக்கும் மலிவான, நம்பகமான, நிலையான மற்றும் புதுமையான முறை ஆற்றல் (எரிசக்தி) கிடைப்பதை உறுதிசெய்து கொள்ளுதல்.
- நல்ல பணிகள் மற்றும் [பொருளாதாரம்|பொருளாதாரங்கள்]]: எல்லோருக்கும் நிலையான, யாவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான, நீடிக்கத்தகு பொருளாதார வளர்ச்சி, முழுமையான, ஆக்கவளம் கொண்ட, கண்ணியமான பணி.
- புதுமை மற்றும் நல்ல உள்கட்டமைப்பு: தாங்கும் திறன் கொண்ட உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், உள்ளடக்கிய மற்றும் வளங்குன்றாத் தொழில்மயமாதலை முன்னெடுத்தல், புதுமையாக்கத்தைப் பேணி வளர்த்தல்.
- சமமின்மையை குறைத்தல்: நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கிடையேயுமான சமமின்மையை, சமத்துவமின்மையைக் குறைத்தல்.
- நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்: நகரங்களையும், மனித சமூகங்களையும், குடியிருப்புகளையும் எல்லாரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பானதாக, தாங்கும் திறன் கொண்ட, நீடிக்கத்தக்கனவாக ஆக்குதல்.
- வளங்களை பொறுப்பான முறையில் பயன்படுத்துதல்: நிலையான, நீடிக்கத்தகு முறையிலான நுகர்வு மற்றும் உற்பத்தியை, உற்பத்தி வடிவங்களை உறுதிசெய்து கொள்ளுதல்.
- வானிலை நடவடிக்கை: காலநிலை மாறுபாட்டையும் அதன் பாதிப்புகளையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான உடனடி நடவடிக்கை எடுத்தல்.
- நிலைப்பாடுடைய பெருங்கடல்கள்: பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல்சார் வளங்களைப் பேணுதலும், வளங்குன்றா வளர்ச்சிக்காக அவற்றை நீடிக்கத்தகுந்த விதத்தில் பயன்படுத்தலும்.
- நிலத்தின் நிலைப்பாடான பயன்பாடு: நில சூழலியல் அமைப்புகளை பாதுகாத்து, மீட்டமைத்து, அவற்றின் நீடித்த பயன்பாட்டை ஊக்குவித்தல், நீடிக்கத்தக்கவாறு காடுகளை நிலைப்பாடான முறையில் நிர்வகித்தல், பாலைவனமாதலுக்கு எதிராகப் போரிடல், நிலச் சீர்கேட்டைத் தடுத்து மீட்டமைத்தல், மற்றும் பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்துதல்.
- அமைதி மற்றும் நீதி: நிலையான, வளங்குன்றா வளர்ச்சிக்காக அமைதியான, யாவரையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்குதல், அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்தல், எல்லா நிலைகளிலும் சிறப்பான, பொறுப்பான மற்றும் உள்ளடக்கிய சூழல்களை உருவாக்குதல். செயல்திறமிக்க, பதிலளிக்கும் பொறுப்புடைய, யாவரையும் உள்ளடக்கிய நிறுவனங்களை எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்துதல்.
- நிலையான அபிவிருத்திக்கான கூட்டமைப்புகள்: நிலையான அபிவிருத்திக்காக செயல்பாட்டு முறைகளை பலப்படுத்துதல், வளங்குன்றா வளர்ச்சிக்கான உலகளாவிய கூட்டமைப்புகளுக்கு புத்துயிர் அளித்தல்.
Ramakrishna Mission, Colombo. Current A/c No. 009010001222 SWIFT CODE: HBLILKLXBank Code 7083 Branch Code 009 Hatton National Bank Ltd, Wellawatta Branch, 100, 102, Galle Road, Colombo 6. For more information contact rkmcey@gmail.com | Donations can be sent to the following bank account for organizing programmes in Schools. The following Costs are involved to conduct a programme.
|
Ramakrishna Mission (Ceylon Branch)
40, Ramakrishna Road,
Colombo 6.
Email - rkmcey@gmail.com
Phone - 0094-11-2588253
Sri Ramakrishna’s Times
Sri Ramakrishna appeared on the scene in Calcutta which was then the capital of British India, at a time when Bengalees were taking to English education on a large scale, had developed doubts about our religion, were attracted to reform, and generally abandoning their age old ‘dharma’ and taking to secular ways. Sri Ramakrishna was born in 1836- the year in which Macaulay’s scheme of education was introduced in India!
No comments:
Post a Comment